தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.
டிசம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக உயர்ந்து வருவது, நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று(டிசம்பர் 22) காலை 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 99,840- க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் சவரனுக்கு மேலும் ரூ. 720 உயர்ந்துள்ளது.
அதன்படி 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ. 1,00,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை 1360 ரூபாய் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று பிற்பகல் எந்த மாற்றமும் இல்லை.
இன்று காலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 231க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,31,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, டிசம்பர் 15 அன்று, சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 1,00,120 ஆக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 17 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1,00,000 ஆக விற்பனையான நிலையில், இன்று மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
