ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 29) இரண்டாவது முறையாக உயர்ந்து 10,770 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்து 86000த்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது நகைபிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய தங்கம் விலை நிலைவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 29) மாலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ. 86,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.60 உயர்ந்து 10,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.85,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆபணர ததங்கம் இன்று ஒரே நாளில் ரூ.1,040 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி சென்னையில் இன்று ஒரு கிராம் விலை ரூ.1 உயர்ந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,60,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.