தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது பெரும் கனவாக மாறி வருகிறது. இந்நிலையில் ஆயுத பூஜை நாளான இன்று இரண்டாவது முறையாக ஆபரண தங்கம் விலை ரூ.480 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று (அக்டோபர் 1) மாலை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கம் இன்று (அக்டோபர் 1) காலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.10,890க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ. 240 உயர்ந்து ரூ. 87,120க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு சவரன் தங்கம் இன்று காலை ரூ.240 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.480 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.720 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.