தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 1,680 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) காலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.560 ஆக உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1120 வரை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 1,680 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.149க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒருகிராம் வெள்ளி ரூ.1 உயந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.