சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தசூழலில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி 85 ஆயிரம் ரூபாயை கடந்து ரூ. 85,120க்கு விற்பனையானது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை நேற்று 87,600 ரூபாயாக இருந்தது.
இந்தநிலையில், இன்று காலை, ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.10,880க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.560 குறைந்து ரூ.87,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று மாலை விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.950-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது.