சென்னையில் இன்று (மார்ச் 20) ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் காலை ஒரு சவரன் ரூ. 2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 3,200 வரை குறைந்தது. நேற்று ரூ. 5,360 குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 400 வரை உயர்ந்துள்ளது.
18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.11,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி வலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5000 வரை குறைந்து ரூ. 2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 19-3-2026 | 1,11,200 |
| 18-3-2026 | 1,16,560 |
| 17-3-2026 | 1,17,200 |
| 16-3-2026 | 1,17,680 |
| 15-3-2026 | 1,18,080 |
| 14-3-2026 | 1,18,080 |
| 13-3-2026 | 1,19,200 |
| 12-3-2026 | 1,19,760 |
| 11-3-2026 | 1,20,960 |
| 10-3-2026 | 1,20,400 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 19-3-2026 | 265 |
| 18-3-2026 | 275 |
| 17-3-2026 | 280 |
| 16-3-2026 | 276 |
| 15-3-2026 | 280 |
| 14-3-2026 | 280 |
| 13-3-2026 | 290 |
| 12-3-2026 | 290 |
| 11-3-2026 | 300 |
| 10-3-2026 | 300 |
