தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலகச்சந்தையில் தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 9) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.11,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1480 உயர்ந்த நிலையில் இன்று ரூ.120 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 9) ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.171 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.