சென்னையில் இன்று (அக்டோபர் 7) ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.89600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு வருவது ஏழை எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவது தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 7) ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.11,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ.89,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இன்று (அக்டோபர் 7) ஒரு கிராம் வெள்ளி ரூ.167க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் நேற்று மாலை (அக்டோபர் 6) ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.65 உயர்ந்து ரூ.11,125க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.89000 க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1400 வரை உயர்ந்த நிலையில் இன்று மேலும் ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.89,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.