தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 6) ஒரு கிராம் தங்கம் ரூ.11,000த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்கள், போர் பதற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மிதிப்பு சரிவு, உலகளாவிய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 6) ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று (அக்டோபர் 6) ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியாக தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வருவதும் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.