சென்னையில் இன்று (நவம்பர் 4) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.100 குறைந்து விற்பனை செய்யபடுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தீபாவளிக்கு முன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு பின் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.320 வரை உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.11,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 குறைந்து ரூ.1,65,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 3 -11-2025 | 90,800 |
| 2 -11-2025 | 90,480 |
| 1 -11-2025 | 90,480 |
| 31 -10-2025 | 90,400 |
| 30 -10-2025 | 90,400 |
| 29 -10-2025 | 90,600 |
| 28 -10-2025 | 88,600 |
| 27-10-2025 | 91,600 |
| 26-10-2025 | 92,000 |
| 25-10-2025 | 92,000 |
