சென்னையில் இன்று (நவம்பர்-3) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.320 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏறு முகத்தில் இருந்த தங்கம் தீபாவளிக்கு பின் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.11,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.168க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,68,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 2 -11-2025 | 90,480 |
| 1 -11-2025 | 90,480 |
| 31 -10-2025 | 90,400 |
| 30 -10-2025 | 90,400 |
| 29 -10-2025 | 90,600 |
| 28 -10-2025 | 88,600 |
| 27-10-2025 | 91,600 |
| 26-10-2025 | 92,000 |
| 25-10-2025 | 92,000 |
| 24-10-2025 | 91,200 |
