இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தங்கம் விலை இன்று (ஜனவரி 21) ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், போர்ப்பதற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ADVERTISEMENT
தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.350 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ. 165 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,415 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.4120 உயர்ந்து ரூ. 1,15,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.300 உயர்ந்து ரூ.11,890க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் ரூ. 60 உயர்ந்து ரூ.11,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் பிற்பகலில் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.345க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ பார் வெள்ளி ரூ.3,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
20-1-20261,11,200
19-1-20261,07,600
18-1-20261,06,240
17-1-20261,06,240
16-1-20261,05,840
15-1-20261,06,320
14-1-20261,06,240
13-1-20261,05,360
12-1-20261,04,960
11-1-20261,03,200
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
20-1-2026340
19-1-2026318
18-1-2026310
17-1-2026310
16-1-2026306
15-1-2026310
14-1-2026307
13-1-2026292
12-1-2026287
11-1-2026275
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share