சென்னையில் இன்று (நவம்பர் 18) ஒரு கிராம் தங்கம் ரூ.11,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.97,600க்கு விற்பனையானது. இதனால் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் தெரிவித்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1,120 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 140 குறைந்து ரூ. 11,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,120 குறைந்து ரூ. 91,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 குறைந்து ரூ. 170க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 குறைந்து ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 17-11-2025 | 92,320 |
| 16-11-2025 | 92,400 |
| 15-11-2025 | 92,400 |
| 14-11-2025 | 93,920 |
| 13-11-2025 | 95,200 |
| 12-11-2025 | 92,800 |
| 11-11-2025 | 93,600 |
| 10-11-2025 | 91,840 |
| 9 -11-2025 | 90,400 |
| 8-11-2025 | 90,400 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 17-11-2025 | 173 |
| 16-11-2025 | 175 |
| 15-11-2025 | 175 |
| 14-11-2025 | 180 |
| 13-11-2025 | 183 |
| 12-11-2025 | 173 |
| 11-11-2025 | 170 |
| 10 -11-2025 | 169 |
| 9 -11-2025 | 165 |
| 8-11-2025 | 165 |
