சென்னையில் தங்கம் விலை இன்று (டிசம்பர் 15) ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச விலை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50,000த்தை தாண்டிய நிலையில் இன்று ரூ.1,00,000த்தை தாண்டி உள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.55 உயர்ந்து ரூ.12,515க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ரூ.1160 வரை உயர்ந்துள்ளது.
இதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.10,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ. 213க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2 உயர்ந்து ரூ.215க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
| 12-12-2025 | 98, 960 |
| 11-12-2025 | 96,400 |
| 10-12-2025 | 96,240 |
| 9-12-2025 | 96,000 |
| 8-12-2025 | 96,320 |
| 7-12-2025 | 96,320 |
| 6-12-2025 | 96,320 |
| 5-12-2025 | 96,000 |
| 4-12-2025 | 96,160 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
| 12-12-2025 | 216 |
| 11-12-2025 | 209 |
| 10-12-2025 | 207 |
| 9-12-2025 | 199 |
| 8-12-2025 | 198 |
| 7-12-2025 | 199 |
| 6-12-2025 | 199 |
| 5-12-2025 | 196 |
| 4-12-2025 | 200 |
