சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஆயுத பூஜை நாளாக இன்று ரூ.87,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச போர் பதற்றங்கள், சந்தை விலை நிலவரம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.240 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கம் இன்று (செப்டம்பர் 1) ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.10,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 240 உயர்ந்து ரூ. 87,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.161க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் நேற்று (செப்டம்பர் 30) ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,860க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.86,880க்கு விற்பனையானது.