சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று (ஜனவரி 3) ஒரு கிராம் தங்கம் ரூ.80 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலக அளவிலான போர்ப் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி மேலும் ரூ.20 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 வரை உயர்ந்து ரூ.14,030 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.12,010க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 2-2-2026 | 1,11,600 |
| 1-2-2026 | 1,19,200 |
| 31-1-2026 | 1,19,200 |
| 30-1-2026 | 1,26,800 |
| 29-1-2026 | 1,34,400 |
| 28-1-2026 | 1,24,880 |
| 27-1-2026 | 1,19,680 |
| 26-1-2026 | 1,20,200 |
| 25-1-2026 | 1,18,000 |
| 24-1-2026 | 1,18,000 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 2-2-2026 | 300 |
| 1-2-2026 | 320 |
| 31-1-2026 | 320 |
| 30-1-2026 | 405 |
| 29-1-2026 | 425 |
| 28-1-2026 | 400 |
| 27-1-2026 | 387 |
| 26-1-2026 | 375 |
| 25-1-2026 | 365 |
| 24-1-2026 | 365 |
