சென்னையில் இன்று (ஜனவரி 29) ஒரு கிராம் தங்கம் ஒரே நாளில் ரூ.1,190 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.1,190 உயர்ந்தது ரூ.16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.875 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.25 உயர்ந்து ரூ.425க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.25000 உயர்ந்து ரூ.4,25,000க்கு விற்பனை செய்யப்படுகிறது
