சென்னையில் இன்று (மார்ச் 26) பிற்பகலில் ஒரு சவரன் தங்கம் ரூ. 2,560 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றம் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை உயர்ந்த நிலையில் பிற்பகலில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ. 70 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ. 320 வரை குறைந்து ரூ.13,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 2560 உயர்ந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்த நிலையில் பிற்பலில் ரூ. 275 குறைந்து ரூ.11,135 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளியில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.அ
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 25-3-2026 | 1,08,800 |
| 24-3-2026 | 1,06,000 |
| 23-3-2026 | 1,06,720 |
| 22-3-2026 | 1,08,960 |
| 21-3-2026 | 1,08,960 |
| 20-3-2026 | 1,11,600 |
| 19-3-2026 | 1,11,200 |
| 18-3-2026 | 1,16,560 |
| 17-3-2026 | 1,17,200 |
| 16-3-2026 | 1,17,680 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 25-3-2026 | 260 |
| 24-3-2026 | 250 |
| 23-3-2026 | 250 |
| 22-3-2026 | 250 |
| 21-3-2026 | 250 |
| 20-3-2026 | 260 |
| 19-3-2026 | 265 |
| 18-3-2026 | 275 |
| 17-3-2026 | 280 |
| 16-3-2026 | 276 |
