சென்னையில் இன்று (ஜனவரி 24) ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ரூ.1600 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,15,000 த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடரந்து நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,720 சரிந்த நிலையில் மீண்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்துடன் போட்டி போட்டு வெள்ளியின் விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ. 70 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.130 உயர்ந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.55 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.110 உயர்ந்து ரூ.12,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி சென்னையில் இன்று காலை ஒரு கிராம் ரூ.10 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை பிற்பகலில் மீண்டும் ரூ.10,000 உயர்ந்து ரூ.3,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 23-1-2026 | 1,16,400 |
| 22-1-2026 | 1,13,600 |
| 21-1-2026 | 1,15,320 |
| 20-1-2026 | 1,11,200 |
| 19-1-2026 | 1,07,600 |
| 18-1-2026 | 1,06,240 |
| 17-1-2026 | 1,06,240 |
| 16-1-2026 | 1,05,840 |
| 15-1-2026 | 1,06,320 |
| 14-1-2026 | 1,06,240 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 23-1-2026 | 345 |
| 22-1-2026 | 340 |
| 21-1-2026 | 345 |
| 20-1-2026 | 340 |
| 19-1-2026 | 318 |
| 18-1-2026 | 310 |
| 17-1-2026 | 310 |
| 16-1-2026 | 306 |
| 15-1-2026 | 310 |
| 14-1-2026 | 307 |
