சென்னையில் இன்று (மார்ச் 24) காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை குறைந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ.250 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 குறைந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் ரூ. 10,000 உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.340 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 250 உயர்ந்து ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று காலை ரூ.2,720 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.2000 உயர்ந்து ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.310 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.230 உயர்ந்து ரூ.11,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.10 உயர்ந்த ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி பிற்பகலில் ரூ.10,000 உயர்ந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 23-3-2026 | 1,06,720 |
| 22-3-2026 | 1,08,960 |
| 21-3-2026 | 1,08,960 |
| 20-3-2026 | 1,11,600 |
| 19-3-2026 | 1,11,200 |
| 18-3-2026 | 1,16,560 |
| 17-3-2026 | 1,17,200 |
| 16-3-2026 | 1,17,680 |
| 15-3-2026 | 1,18,080 |
| 14-3-2026 | 1,18,080 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 23-3-2026 | 250 |
| 22-3-2026 | 250 |
| 21-3-2026 | 250 |
| 20-3-2026 | 260 |
| 19-3-2026 | 265 |
| 18-3-2026 | 275 |
| 17-3-2026 | 280 |
| 16-3-2026 | 276 |
| 15-3-2026 | 280 |
| 14-3-2026 | 280 |
