சென்னையில் இன்று (பிப்ரவரி 11) காலை ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.190 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலக அளவிலான தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் நீடிக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1680 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று பிற்பகலில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ. 190 உயர்ந்து ரூ.14,790க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ. 1,18,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.10 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.160 வரை உயர்ந்து ரூ.12,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 3ஆவது நாளாக ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 10-2-2026 | 1,16,640 |
| 9-2-2026 | 1,17,200 |
| 8-2-2026 | 1,15,360 |
| 7-2-2026 | 1,15,360 |
| 6-2-2026 | 1,14,000 |
| 5-2-2026 | 1,14,560 |
| 4-2-2026 | 1,19,200 |
| 3-2-2026 | 1,14,160 |
| 2-2-2026 | 1,11,600 |
| 1-2-2026 | 1,19,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 10-2-2026 | 300 |
| 9-2-2026 | 300 |
| 8-2-2026 | 285 |
| 7-2-2026 | 285 |
| 6-2-2026 | 280 |
| 5-2-2026 | 300 |
| 4-2-2026 | 320 |
| 3-2-2026 | 300 |
| 2-2-2026 | 300 |
| 1-2-2026 | 320 |
