சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பி உள்ளது. மேலும் உலகளாவிய அரசியல் பதட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விகித மாற்றம் மற்றும் தங்கம் மீதான உலக சந்தைத் தேவையின் உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுமுகத்தில் உள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்று (செப்டம்பர் -3) ஒரு சவரன் தங்கம் விலை ரூ,640 உயர்ந்து 78,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.9805க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் மாற்றமின்றி இன்று (செப்டம்பர் -3) ஒரு கிராம் ரூ. 137க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நேற்று (செப்.2) ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.