தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 6) ஒரேநாளில் இரண்டாவது முறையாக ரூ.65 உயர்ந்து ரூ.11,125க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இன்று காலையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.11,060க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனை செய்யபட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
இந்நிலையில் இன்று மாலை ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.65 உயர்ந்து ரூ.11,125க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.89000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (அக்டோபர் 6) மாலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.167க்கு விற்பனை செய்யப்பகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் ரூ 1,400 வரை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.