காலையில் தங்கம் விலை குறைந்தபிற்பகலில் அதிரடியாக ரூ.640 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கத்தின் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது 90,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.11,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று (அக்டோபர் 10) காலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.640 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் தற்போது ரூ.90,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.184 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9-10-2025 | 91,400 |
8-10-2025 | 91,080 |
7- 10-2025 | 89,600 |
6-10-2025 | 89,000 |
5-10-2025 | 87,600 |
4-10-2025 | 87,600 |
3-10-2025 | 87,200 |
2-10-2025 | 87,600 |
1-10-2025 | 87,600 |