2025ம் ஆண்டின் கடைசி நாளில் தங்கம்.. வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தங்கம் வெள்ளி விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த 2025ம் ஆண்டில் தான் பல்வேறு புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்தது மட்டும் இல்லாமல், வெள்ளி விலை ரூ.285 வரை விற்பனை செய்யப்பட்டது. இது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்றே சரிவை சந்தித்தாலும் மீண்டும் விலை உயரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) ஒரு கிராம் தங்கம் ரூ. 50 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வ தேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் வரி விகிதம், போர்ப் பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.12,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ. 1,00,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.10,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,58,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
30-12-20251,00,800
29-12-20251,04,160
28-12-20251,04,800
27-12-20251,04,800
26-12-20251,03,120
25-12-20251,02,560
24-12-20251,02,400
23-12-20251,02,160
22-12-20251,00,560
21-12-202599,200
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
30-12-2025258
29-12-2025281
28-12-2025285
27-12-2025285
26-12-2025254
25-12-2025245
24-12-2025244
23-12-2025234
22-12-2025231
21-12-2025226
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share