சென்னையில் இன்று (டிசம்பர்30) தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியான சரிவை சந்தித்துள்ளது. இது இல்லத்தரசிகளிடையே சற்றே ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது. எனினும் தங்கம் விலை தற்போது வரை ஒரு சவரன் ஒரு லட்சத்தை கடந்தே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றும் இன்றும் சற்றே சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 23,000 வரை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,360 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.420 குறைந்து ரூ. 12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.360 குறைந்து ரூ.10,505க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 23 குறைந்து ரூ. 258க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 23,000 குறைந்து ரூ. 2,58,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 29-12-2025 | 1,04,160 |
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
| 24-12-2025 | 1,02,400 |
| 23-12-2025 | 1,02,160 |
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
| 20-12-2025 | 99,200 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 29-12-2025 | 281 |
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
| 24-12-2025 | 244 |
| 23-12-2025 | 234 |
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
| 20-12-2025 | 226 |
