சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (டிசம்பர்29) சற்றே குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4000 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640 வரை குறைந்து ரூ. 1,04,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.85 குறைந்து ரூ. 10,865க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ. 281க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 4000 குறைந்து ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
| 24-12-2025 | 1,02,400 |
| 23-12-2025 | 1,02,160 |
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
| 20-12-2025 | 99,200 |
| 19-12-2025 | 99,040 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
| 24-12-2025 | 244 |
| 23-12-2025 | 234 |
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
| 20-12-2025 | 226 |
| 19-12-2025 | 221 |
