சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று (டிசம்பர் 15) ஒரு சவரன் தங்கம் ரூ.720 வரை உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளதால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கனவாக மாறும் நிலை உருவாகி உள்ளது.
இன்றைய வெள்ளி விலை
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 உயர்ந்து ரூ. 2,13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
| 12-12-2025 | 98, 960 |
| 11-12-2025 | 96,400 |
| 10-12-2025 | 96,240 |
| 9-12-2025 | 96,000 |
| 8-12-2025 | 96,320 |
| 7-12-2025 | 96,320 |
| 6-12-2025 | 96,320 |
| 5-12-2025 | 96,000 |
| 4-12-2025 | 96,160 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
| 12-12-2025 | 216 |
| 11-12-2025 | 209 |
| 10-12-2025 | 207 |
| 9-12-2025 | 199 |
| 8-12-2025 | 198 |
| 7-12-2025 | 199 |
| 6-12-2025 | 199 |
| 5-12-2025 | 196 |
| 4-12-2025 | 200 |
