சென்னையில் இன்று (ஜனவரி 13) ஒரு சவரன் தங்கம் ரூ.400 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, போர் பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.10,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.5 உயர்ந்து ரூ.292க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 5000 உயர்ந்து ரூ. 2,92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.300 ஐ நெருங்கி வருவது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 12-1-2026 | 1,04,960 |
| 11-1-2026 | 1,03,200 |
| 10-1-2026 | 1,03,200 |
| 9-1-2026 | 1,02,400 |
| 8-1-2026 | 1,02,000 |
| 7-1-2026 | 1,02,400 |
| 6-1-2026 | 1,02,640 |
| 5-1-2026 | 1,02,080 |
| 4-1-2026 | 1,00,800 |
| 3-1-2026 | 1,00,800 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 12-1-2026 | 287 |
| 11-1-2026 | 275 |
| 10-1-2026 | 275 |
| 9-1-2026 | 268 |
| 8-1-2026 | 272 |
| 7-1-2026 | 277 |
| 6-1-2026 | 271 |
| 5-1-2026 | 266 |
| 4-1-2026 | 257 |
| 3-1-2026 | 257 |
