சென்னையில் தங்கம் விலை இன்று (செப்டம்பர் – 12) ஒரே நாளில் ரூ.720 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. போர் பதற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் மேலும் சில நாட்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (செப்டம்பர் -12) ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.10,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து 81,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கத்தை தொடர்ந்த வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (செப்டம்பர் -12) ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.142 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.