சென்னையில் இன்று (பிப்ரவரி 13) ஒரு கிராம் தங்கம் ரூ.200 வரை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் ஒரு கிலோ ரூ.20,000 வரை குறைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரேநாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 குறைந்து ரூ.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.200 குறைந்து ரூ.12,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் 4 நாட்களாக வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று இன்று ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 12-2-2026 | 1,16,800 |
| 11-2-2026 | 1,18,320 |
| 10-2-2026 | 1,16,640 |
| 9-2-2026 | 1,17,200 |
| 8-2-2026 | 1,15,360 |
| 7-2-2026 | 1,15,360 |
| 6-2-2026 | 1,14,000 |
| 5-2-2026 | 1,14,560 |
| 4-2-2026 | 1,19,200 |
| 3-2-2026 | 1,14,160 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 12-2-2026 | 300 |
| 11-2-2026 | 300 |
| 10-2-2026 | 300 |
| 9-2-2026 | 300 |
| 8-2-2026 | 285 |
| 7-2-2026 | 285 |
| 6-2-2026 | 280 |
| 5-2-2026 | 300 |
| 4-2-2026 | 320 |
| 3-2-2026 | 300 |
