தங்கம் விலை இன்று காலை ஒரு கிராம் ரூ.370 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.280 வரை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கிராம் தங்கம் ரூ. 650 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.370 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ. 280 உயர்ந்து ரூ.15.610க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ. 5200 வரை உயர்ந்து ரூ.1,24,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் இன்று காலை ரூ.2.960 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.2,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் பிற்பகளில் மேலும் ரூ.240 உயர்ந்த நிலையில் ரூ.13,025க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
பிற்பகலில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இன்று ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.13,000 உயர்ந்து ரூ.4,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 27-1-2026 | 1,19,680 |
| 26-1-2026 | 1,20,200 |
| 25-1-2026 | 1,18,000 |
| 24-1-2026 | 1,18,000 |
| 23-1-2026 | 1,16,400 |
| 22-1-2026 | 1,13,600 |
| 21-1-2026 | 1,15,320 |
| 20-1-2026 | 1,11,200 |
| 19-1-2026 | 1,07,600 |
| 18-1-2026 | 1,06,240 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 27-1-2026 | 387 |
| 26-1-2026 | 375 |
| 25-1-2026 | 365 |
| 24-1-2026 | 365 |
| 23-1-2026 | 345 |
| 22-1-2026 | 340 |
| 21-1-2026 | 345 |
| 20-1-2026 | 340 |
| 19-1-2026 | 318 |
| 18-1-2026 | 310 |
