எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கும் நிலையில், அமித்ஷாவை ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். gk vasan meet amithsha
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 25) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பேசப்படும் என தகவல்கள் வருகின்றன.
அவருக்கு முன்னதாக இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். டெல்லி, பாராளுமன்ற அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக ஜி.கே.வாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் எடப்பாடி – அமித்ஷா சந்திப்புக்கு முன்னதாக ஜி.கே.வாசன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்புடன் இருந்தவர் ஜி.கே.வாசன் என்பது குறிப்பிடத்தகக்து. gk vasan meet amithsha