சென்னை உயர் நீதிமன்ற மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 12) ஆட்கொணர்வு மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. தாயார் மறுமணம் செய்து கொண்டதால் நீலாங்கரையைச் சேர்ந்த 15 சிறுமி ஒருவரின் தந்தை இம்மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அந்தமானைச் சேர்ந்த சிறுமியின் தாய் மறுமணம் செய்ததால் அரசு காப்பகத்துக்கு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாடியில் இருந்து சிறுமி குதித்து தற்கொலை முயன்றது உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.