ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்மின் நிறுவனம் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
அதன் படி ஜிபிஎஸ் வசதி கொண்ட மூன்று ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுக்கு கார்மின் இந்தியா அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது. ஃபோர்-ரன்னர் ஜிபிஎஸ் ஸ்மார்ட் வாட்சுகள் ஓட்டப்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.
ஓட்டப் பந்தய வீரர்களுக்காக இந்த ஸ்மார்ட் வாட்சுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கார்மின் ஃபோர்-ரன்னர் 955 மற்றும் ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில் கார்மின் ஃபோர்-ரன்னர் அறிவித்துள்ள சலுகை விவரம்:
ஃபோர்-ரன்னர் 745 மேக்மா ரெட் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990
கார்மின் ஃபோர்-ரன்னர் 745 பிளாக் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990 கார்மின்
கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் பிளாக் ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990
கார்மின் ஃபோர்-ரன்னர் 45 பிளாக் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13 ஆயிரத்து 990
கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் லாவா ரெட் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரத்து 990
கார்மின் ஃபோர்-ரன்னர் 45 லாவா ரெட் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12 ஆயிரத்து 990
இந்த சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
கார்மின் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகையை விற்பனையை பயன்படுத்தி தள்ளுபடியை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா: வீல் சேரில் இருந்தபடியே விமான சேவை நடத்தியவர்!