தூத்துக்குடியில் ஜூலை 26-ல் மோடி திறந்து வைக்கும் திட்டங்கள் என்ன? முழு விவரம்!

Published On:

| By Mathi

Tuticorin Airport PM Modi

தூத்துக்குடிக்கு (Tuticorin Thoothukudi) ஜூலை 26-ந் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ 4800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி- நாட்டுக்கு அர்ப்பணிக்கும் திட்ட விவரங்கள்:

  • ரூ 450 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடம் திறப்பு
  • 17,340 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முனையம், நெரிசல் மிக்க உச்சபட்ச நேரங்களில் 1,350 பயணிகளையும், ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளையும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • எதிர்காலத்தில் உச்ச நேரத்தில் 1800 பயணிகளையும், ஆண்டிற்கு 25 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
  • 100% எல்இடி விளக்குகள், ஆற்றல் திறன் கொண்ட மின் மற்றும் மேலாண்மை அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாடு ஆகியவற்றுடன், இந்த முனையம் GRIHA-4 நிலைத்தன்மை மதிப்பீட்டை அடைவதற்காக கட்டப்பட்டுள்ளது.
  • விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வழித்தடத்தின் கீழ் ரூ 2,350 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட NH-36 -ன் 50 கி.மீ சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பாதையின் 4-வழிப்பாதை திறக்கப்படுகிறது.
  • இந்த நெடுஞ்சாலையில் மூன்று புறவழிச்சாலைகள், கொள்ளிடம் ஆற்றின் மீது 1 கி.மீ தொலைவுக்கு 4 வழிப்பாதை பாலம், 4 பெரிய பாலங்கள், 7 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் ஆகியவை அடங்கும்.
  • சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே பயண நேரத்தை 45 நிமிடங்கள் குறைக்கும்.
  • 5.16 கி.மீ NH-138 தூத்துக்குடி துறைமுக சாலையின் 6 வழிப்பாதை திறக்கப்படுகிறது.
  • சுமார் ரூ 200 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
  • சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும், தளவாடச் செலவுகளைக் குறைக்கும்.
  • தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சுமார் ரூ 285 கோடி மதிப்புள்ள, ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு தளவாட நிலையம்–III திறக்கப்படுகிறது
  • ஒட்டுமொத்த துறைமுகச் செயல்திறனை மேம்படுத்தும்
  • 90 கி.மீ மதுரை-போடிநாயக்கனூர் பாதையின் மின்மயமாக்கல் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும். மதுரை மற்றும் தேனியில் சுற்றுலா மற்றும் பயணத்தை ஊக்குவிக்கும்.
  • திருவனந்தபுரம்-கன்னியாகுமரி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கி.மீ. நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் ரூ 650 கோடி இரட்டைப்பாதை, தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையிலான இணைப்புகளை வலுப்படுத்தும்.
  • ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் சந்திப்பு (12.87 கி.மீ) மற்றும் திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கி.மீ) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதை, சென்னை-கன்னியாகுமரி போன்ற முக்கிய தெற்கு வழித்தடங்களில் பயண நேரத்தைக் குறைக்கும். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பையும் அதிகரிக்கும்

கூடங்குளத்தில் மோடி திறந்து வைக்கும் திட்டம் என்ன?

கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4 (2×1000 மெகாவாட்) -லிருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மாநிலத்தின் மின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான, மாநிலங்களுக்கு இடையேயான ஒரு பெரிய மின் பரிமாற்ற அமைப்புக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ADVERTISEMENT
  • ரூ 550 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், கூடங்குளத்திலிருந்து தூத்துக்குடி-II ஜிஐஎஸ் துணை மின்நிலையம் வரை 400 கிலோவாட் இரட்டை-சுற்று மின்மாற்ற பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய முனைய உபகரணங்கள் அடங்கும்.
  • தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், நம்பகமான சுத்தமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதிலும், தமிழ்நாடு மற்றும் பிற பயனாளி மாநிலங்களின் அதிகரித்து வரும் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share