ADVERTISEMENT

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் டீ, காபி விலை கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On:

| By Mathi

Tea Coffe Price

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளை முதல் டீ, காபி விலையை உயர்த்தப் போவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக டீ கடைகளில் ஒரு கிளஸ் டீ ரூ.12-க்கும் ஒரு கிளாஸ் காபி ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பால் விலை, காபி தூள் விலை, டீ தூள் விலை உயர்ந்துள்ளதால் நாளை செப்டம்பர் 1-ந் தேதி முதல் டீ, காபி விலையை உயர்த்தப் போவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி ஒரு கிளாஸ் டீ விலை ரூ12-ல் இருந்து ரூ15-க்கும் ஒரு கிளாஸ் காபி விலை ரூ.15-ல் இருந்து ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. டீ, காபி விலை ரூ15, 18 என விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share