சமூக வலைதளங்களில் தற்போது விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது ‘கைலி’ உடை. இதன் பின்னணி என்ன?
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மருத்துவமனையில் இருந்தபடியே அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் பற்றி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த வீடியோக்கள், படங்கள் வெளியாகின.

இதில் முதல்வர் ஸ்டாலின், ‘கைலி’ உடையில் இருக்கிறார். கைலி அணிந்தபடியே அரசு கோப்புகளிலும் கையெழுத்திடுகிறார். இதுதான் தற்போது ‘கைலி’ குறித்த சோசியல் மீடியா பேசுபொருளின் பின்னணி.
‘கைலி’ தொடர்பாக சமூக வலைதளங்களில் இடம் பெற்ற கருத்துகள்
@Dhananandhar: லுங்கி/கைலி/ கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் நான் பயன்படுத்த துவங்கினேன். ஏதேச்சையாக கைத்தறி வேட்டியில் இருந்து டவுசருக்கு (shorts) மாறி தற்போது லுங்கியில்… ஒவ்வொரு காலகட்டத்தில் உடைகள் மாறுகிறது. இந்த லுங்கி நல்ல சவுகரியமாக தான் இருக்கிறது. இப்போது கட்டாமல் நிறைய வேட்டிகள்…
@mathimaran: ஆரியத்திற்கு லுங்கி மீது எப்போதுமே தீண்டாமை. அதை அணிபவர்கள் மீதும் வெறுப்பு. ஆனால், ஓய்வு நேரத்தில் வீட்டில் மட்டுமல்ல, மருத்துவமனையிலேயே லுங்கி கட்டி தான் அரசாங்கத்தையே நடத்துவோம். பெரியார்+கலைஞர்+தளபதி = திராவிட லுங்கி
@oruMLAda: எனக்கு என்ன தோனுச்சுனா, நம்மல மாதிரியே முதல்வரும் கைலி(லுங்கி) கட்டியிருக்குறாரேனு ஒரு சின்ன சந்தோசம்
@DixadinaDMK: தலைவர் In Casuals சாதாரண சட்ட, கைலி, கைல ஒரு துண்டு…
எந்த Angleல பாத்தாலும்… தலைவர் Typical Tamil Nadu Daddies மாதிரி இருக்காரு. இருந்தாலும் நம்ம உதய அண்ணாவிட Smartடா இருக்காரு.. அண்ணா
@Udhaystalin நாளுக்கு நாள் தலைவர் Smartடாயிட்டே போறாரு.. தயவு செஞ்சு கெஞ்சி பிரச்சாரத்திற்கு நம்ம கட்சி சட்டையும் கட்சி வேஷ்டியும் கட்டுங்க