ADVERTISEMENT

ஜிம் முதல் விமான டிக்கெட் வரை… ஜிஎஸ்டி வரி குறைப்பு – மலிவு விலையில் முக்கிய சேவைகள்!

Published On:

| By Kavi

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த நான்கு வரி விகித அடுக்குகள் இரண்டு வரி விகித அடுக்குகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்கள் 5 சதவீதமாகவும், இதரப் பொருட்களுக்கு 18 சதவீதமாகவும் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சில ஆடம்பர வகைப் பொருட்களுக்கான வரி விகிதம் 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் இம்மாதம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

ரெஸ்டாரண்டுகளில் 12-18 சதவிகிதமாக விதிக்கப்பட்ட வரி இப்போது ஒரே மாதிரியாக 5சதவிகிதம் மட்டும் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

அதேபோல தங்கும் ஹோட்டல்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 க்குக் குறைவான விலையுள்ள அறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 முதல் ரூ.7,500 வரையிலான கட்டணங்களுக்கு 12% வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் ரூ.7,500 க்கு மேல் போனால் 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இது திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

விமானக் கட்டணங்களும் குறைய வாய்ப்புள்ளது. எகானமி கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு புதிய மாற்றத்தின்படி 12% க்கு பதிலாக 5% வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் பிசினஸ் கிளாஸ் கட்டணங்கள் 18% லிருந்து 12% ஆகக் குறையும். பண்டிகைக் காலத்தில் உள்நாட்டுப் பயணங்களை அதிகரிப்பதை இந்த விலைக் குறைப்பு ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சலூன்கள், ஜிம்கள், யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கிளப்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய சேவைகள் 18% இலிருந்து சலுகை 5% அடுக்குக்கு மாற்றப்படும். இந்த மாற்றம் தனிப்பட்ட பராமரிப்பை ஆடம்பரமாக இல்லாமல் அடிப்படைத் தேவையாக மாற்றுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூற்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share