விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான தமிழ்நாடு அரசின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
1.மாநில அரசு விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கி வந்த ஓய்வூதியம் 22,000 ஆக உயர்ந்தி வழங்கப்படும்.
2. விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 12000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
3. வீர பாண்டிய கட்டபொம்மன், வழித்தோன்றல்கள் முன்னாள் ராமநாதபுர மன்னர் விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், மற்றும் வ.உ.சிதம்பரனாரின் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
4. 2ம் உலகப்போரில் பங்கேற்ற தமிழக முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால ஓய்வூதியம் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
5. 2ம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
6. தமிழக முன்னாள் படை வீரர்களின் வசதிக்காக 33,000 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி, 22,000 கோடி மதிப்பில் கட்டப்படும்.
7.தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்
8. ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையம், மாவட்டத்திற்கு ஒரு ஒட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
9. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பு பெற நவீன தொழில் நுட்பங்களில் 10,000 மாணவர்களுக்கு 15 கோடி செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தமது உரையில் தெரிவித்தார்.