பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையில், இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 7 அக்டோபர் 2023 அன்று பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள போராளி அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் கடந்த இரண்டரை வருடங்களாக மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலால் 60,000 காசா பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமாக பெண்களும் குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் கடந்த ஒரு வருடமாக காசா பகுதிக்கு எந்தவிதமான உணவுப் பொருட்களையும், மனிதாபிமான உதவிகளையும் செல்லாமல் இருக்க இஸ்ரேல் பல்வேறு விதமான தடைகளை விதித்தது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான காசா குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர்.
காசாவில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் உலக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இமானுவேல் மக்ரோன் கட்சி மிகப்பெரிய அளவிற்கு தோல்வியை எதிர்கொண்டது.
இந்த சூழலில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில் போர் நிறுத்தம் தொடர்பாகவும் பிணைக்கதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாக எழுதியுள்ளார்.
மக்களின் போராட்டங்களால் ஏற்படுகின்ற தொடர்ச்சியான நெருக்கடி காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு அந்த கடிதத்திற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் இன்று பதிலளித்துள்ளார்.
அதில் இரு-நாடுகள் தீர்வு, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், பிணைய கைதிகளை, உடனடியாக விடுவிக்க வேண்டும், பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஃபிரான்ஸின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடுமையாக கண்டனங்களை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் எடுத்த இந்த முடிவு பொறுப்பற்றது என்று அமெரிக்காவும், இந்த அறிவிப்பு தீவிரவாதத்தை அங்கீகரிப்பதாகவும் ஈரானின் கூட்டாளிகளை வளர்த்து விடும் போக்கை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.