அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனி சுப்புரத்தினம் மற்றும் சிவகாசி பாலகங்காதரன் ஆகியோர் இன்று (ஜனவரி 8) திமுகவில் இணைகின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் திமுகவில் இணைய உள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஓபிஎஸ் அணியில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் எக்ஸ் எம்.எல்.ஏக்கள் இருவரும் திமுகவில் இணைகின்றனர்.
சிவகாசி பாலகங்காதரன், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளர் உமாநாத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
