அதிமுக அமைச்சர்களின் தொடர் சர்ச்சை பேச்சு.. பெண்களை உருவ கேலி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On:

| By Pandeeswari Gurusamy

MR Vijayabaskar

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் நேற்று (மார்ச் 17) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கரூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார். அப்போது திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த விஜயபாஸ்கர் அக்ரி காலேஜ் கொண்டு வந்தததை சாதனையாக சொல்லி உள்ளனர். கட்டத்திற்கு வெறும் 5 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளனர். அதில் ஒரு வருடம் படித்து பிள்ளைகள் வெளியில் வந்துள்ளனர். பெண்கள் குளிப்பதற்கு தகரத்தை வைத்து தடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அம்மா மண்டபத்தில் அக்ரி காலேஜ் நடத்தும் அறிவாளி நம்மூர் எம்எல்ஏதான். அக்ரி காலேஜை எங்கு நடத்த வேண்டும் விவசாய நிலம் இருக்க வேண்டும். விவசாயம் பார்க்க வேண்டும். நெல், கத்தரிக்காய், கரும்பு என்றால் என்ன எப்படி விளைவிக்க வேண்டும். ஆடு மாடு, கோழி எப்படி வளர்ப்பது என்பதை தெரிவிந்து கொள்ள வேண்டும். மண்டபத்தில் வைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் உழவர் சந்தையை ஜன்னல் வழியாக காண்பிக்கிறார்களாம். உழவர் சந்தையில் உள்ள காய் காய்கறிகளை காட்டி அதுதான் கத்தரிக்காய். ஒல்லியாக இருக்கிறது பார் அதுதான் முருங்கை காய் என்கிறார்களாம். பக்கத்தில் இருக்கும் பெண்களை கைகாட்டி இந்த பிள்ளைகள் போல் குண்டா இருக்கிறது பார் அதுதான் பூசணிக்காய் என்று என்கிறார்கள் ” என்று பேசி உள்ளார்.

அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக கூறி பெண்களை உருவ கேலி செய்து பேசி உள்ள விஜயபாஸ்கர் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ஆகியோர் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது எம்.ஆர் விஜயபாஸ்கர் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share