ஊரக பகுதிகளில் மேம்பாலங்களை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. flyovers in rural areas
ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக அனைத்து பருவ காலங்களிலும் சென்றடைவதற்காக கிராமச் சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஜூலை 7) அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், அனைத்து மாவட்டங்களில் இருந்து மேம்பாலங்கள் அமைப்பதற்காக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி 321 மேம்பாலங்கள் அமைக்குமாறு கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் உடனடித் தேவையின் அடிப்படையில், 2025-26 ஆம் ஆண்டில் ரூ.505.56 கோடி செலவில் 100 பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முத்தலமைச்சர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் ஐ. பெரியசாமி, ”ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். 2025-26ஆம் ஆண்டி 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் அமைப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் 100 மேம்பாலங்களை அமைக்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. flyovers in rural areas