சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி தமிழ்நாட்டின் திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்திலும் இடைவிடாது கனமழை கொட்டுகிறது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 16 ஆண்டுகளாக திருப்பத்தூரைச் சேர்ந்த சிவில் என்ஜினியர் ராஜேஷ்குமார் பணியாற்றி வந்தார். ராய்ப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு மனைவி, குழந்தைகளுடன் காரில் ராஜேஷ்குமார் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பஸ்தார் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ராஜேஷ்குமார் கடக்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அந்த கார் அடித்துச் செல்லப்பட்டது.இதில் ராஜேஷ்குமார், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.