வங்கிகளில் முதல் முறையாக கடன் பெறும் போது ‘CIBIL’ Score கட்டாயம் இல்லை; அதேநேரத்தில் கடன் பெறும் நபரின் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என விளக்கம் அளித்துள்ளது மத்திய அரசு.
வங்கிகளில் கடன் பெறுவதற்கு CIBIL Score என்பது கட்டாயம். ஒரு தனிநபரின் கடன் தகுதியை தீர்மானிக்கக் கூடிய அம்சமாக இது பார்க்கப்படுகிறது. ஒரு நபருக்கு போதுமான CIBIL Score இல்லாத நிலையில் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன.
இதனால் வங்கிகளில் முதல் முறை கடன் பெறும் நபர்களுக்கு இந்த சிபில் ஸ்கோர் தேவை இல்லை என்கிற நடைமுறையை அமல்படுத்துகிறது மத்திய அரசு.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கியானது ஏற்கனவே முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் என்ற வரையறையையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை. அதே நேரத்தில் முதல் முறை கடன் பெறும் நபரின் பின்னணி குறித்து ஆய்வு செய்வது அவசியமாகிறது என்றார்.