ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆந்திரா மாநிலத்தில் திடீரென தீ பிடித்தது. இவ்விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் நோக்கி டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திரா மாநிலம் எலமஞ்சில்லி ரயில் நிலையத்துக்கு வந்த போது திடீரென ஏசி பெட்டிகளில் தீப்பிடித்தது.
இதில் ரயிலின் 2 பெட்டிகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
