வெந்தய தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் : சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது?

Published On:

| By Santhosh Raj Saravanan

வெந்தய தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் : சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது? - Fenugreek or cumin water Which is best for diabetics

வெந்தயத் தண்ணீர் (Fenugreek) மற்றும் சீரகத் (cumin water) தண்ணீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது என்பது பற்றிய தகவல்களை பார்ப்போம்.

இந்தியாவில் பல லட்சம் மக்கள் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது, மன அழுத்தம் போன்றவை சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதற்காக உணவுக் கட்டுப்பாடு, மாத்திரைகள், இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் அவர்களுக்கு உள்ளது. குறிப்பாக உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானதாகும். சர்க்கரை கட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் இதயப் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து கூட உள்ளது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். வெந்தயம் மற்றும் சீரகம் ஆகிய இரண்டும் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கின்றன.

ADVERTISEMENT

வெந்தயம், சீரகம் எது சிறந்தது?

சீரகம் மற்றும் வெந்தயத்தை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக் குடிப்பதால் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமானமும் மேம்படுகிறது. இருப்பினும், ரத்தச் சர்க்கரையை விரைவாகக் குறைக்க சீரகத் தண்ணீரா அல்லது வெந்தயத் தண்ணீரா (Fenugreek water) எது சிறந்தது என்று கேள்விகள் எழுவதும் உண்டு.

ADVERTISEMENT

வெந்தயம், சீரகத்தில் உள்ள சத்துக்கள்

வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் கேலக்டோமன்னன் (Galactomannan) என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது ரத்த சர்க்கரையை சீராக்கவும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. சீரகத்தில் தைமால் என்ற சேர்மம் உள்ளது, இது செரிமான நொதிகளைத் தூண்டி வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது. இவை இரண்டும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. மேலும், செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

ADVERTISEMENT

வெந்தயத் தண்ணீர்  

ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, உணவில் இருந்து சர்க்கரையை உடல் மெதுவாக உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. இது ரத்த குளுக்கோஸ் (Blood glucose control) அளவில் ஏற்படும் திடீர் உயர்வுகளைத் தடுக்கிறது. ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரைக் குடிப்பதும், விதைகளை மென்று சாப்பிடுவதும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இது குறிப்பாக டைப் 2  சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது.

சீரக தண்ணீர்

சீரக தண்ணீர் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது. சீரகத்தில் (jeera water for diabetes) உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சியைக் குறைத்து, ஆரோக்கியமான செல்களை ஊக்குவிக்கின்றன. இது உடல் எடை குறைவதற்கும், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. உடல் எடை குறைவது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. காலையில் வெதுவெதுப்பான சீரக நீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் நீங்கள் ஆற்றலுடன் இருக்க முடியும்.

எதை தேர்வு செய்து குடிக்கலாம்?

ரத்தச் சர்க்கரை அளவை விரைவாகவும் நேரடியாகவும் குறைக்க விரும்பினால் வெந்தயத் தண்ணீர் சிறந்தது. ஆனாலும், செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது உடல் எடையைக் (Weight loss water) குறைக்க விரும்புபவர்கள் சீரகத் தண்ணீரைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் தண்ணீரை மட்டும் நம்பி இருக்க வேண்டாம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share