உளவுத் துறைக்கு பெண் டிஜிபி நியமனம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (மார்ச் 14) வெளியிட்ட அறிவிப்பில்,

ADVERTISEMENT

பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாக தேவி,  உளவுத் துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். 

சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமார், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்றும்

ADVERTISEMENT

குடிமைப் பொருள் வழங்கல் – குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, குடிமைப் பொருள் வழங்கல் – குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஐபிஎஸ் நியமிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share