கரூரில் மகனை இழந்து கதறும் தந்தையின் வீடியோ பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வர வைக்கிறது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மூன்றாவது வரமாக நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே கூட்ட நெரிசலில் தனது மகனை பறிகொடுத்த தந்தை மருத்துவமனையில் பிள்ளையை கையில் ஏந்தியவாறு கதறும் வீடியோ இணையத்தை உலுக்கியுள்ளது.
அதில் அவர் நான் கூட்டத்துக்கு கூட்டிட்டு போகவே இல்ல சார்… நான் வேலைக்கு போயிட்டேன் சார் என்று கத்தி கதறுகிறார்.
அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.
இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே காவல்துறையும், தமிழக வெற்றிக் கழக தலைமையும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.
எனினும் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.